Saturday, March 24, 2012

ஆசீர்பாதம் திரிந்து ஆசீர்வாதம் ஆன கதை

ஆசீர்பாதம் திரிந்து ஆசீர்வாதம் ஆன  கதை

"ஆசீர்பாதம் என்பது மற்றவரின் காலில் விழுந்து வணங்குவது அல்ல.  கால் என்பது மல ஜலங்களை மிதித்து வரும். 
உயிரின் மேன்மையான  இடத்தை  சீர்பாதம் என்கிறார்கள் சித்தர்கள். 
இந்த ஆசீர்பாதத்தை ஒரு தக்க குருநாதர் மட்டுமே சுட்டிக் காட்ட
முடியும்.    

ஆசீர்பாதம் = அy - அகரம்] +
                              சீர் [பஞ்ச பூதங்களால் அழகாக  கட்டப்பட்ட] +
                              பாதம் [உயிர் உறையுமிடம்]
இதையே பாம்பாட்டி சித்தர் "சீர்பாதம் கண்டோம் ஆடு பாம்பே என்கிறார்"
ஆசீர்பாதம் என்பது ஒரு காணக்கூடிய பொருள்.வணங்கும் பொருள் அல்ல.

மனித பிறவியின் நோக்கம் உயிரை பற்றி அறிந்து,நம்முள் உயிர் எங்குள்ளது[நமது தலையின் வலது பாகத்தில்] என்று கண்டறிந்து ஞான வாழ்வு வாழ்வதே. சித்தர்கள் போதித்தது ஆசையிலிருந்து விடுபட்டு வாழ்வதே. 
இதை தான் பெரியோர்கள் "எண் சான் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்றார்கள்" 
சித்தர்கள் கூறியது, யாம் மலையையும் பெயர்க்க வல்லோம் என்றும், அண்டத்தையும் கட்டுபடுத்தவல்லோம் என்றும்.
 அந்தகாலத்தில் சித்தர்கள் ஆசீர்பாதம் அளிக்கிறேன் என்று கூறினார்கள். அதாவது உயிர் இருக்கும் இடைத்தை நாங்கள் உனக்கு காட்டவள்ளோம் என்று கூறிவந்த வார்த்தை நாளடைவில் மருவி ஆசீர்வாதம் அளிப்பதாக கூறி  செயலற்ற   வார்த்தையாக
 மாற்றியுள்ளார்கள்
இன்று. அந்த காலத்தில் சித்தர்கள் உலக விசயங்களை துறந்து இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து ஆசீர்பாதத்தை மக்களுக்கு வழங்கி, காட்டி வந்தார்கள். இன்றைய காலகட்டத்தில் ஆசீர்வாதம் செய்பவர்கள்  என்ன செய்கிறார்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை பற்றி உங்களுக்கே தெரியும்? நாம்மெல்லாம்    இப்படிப்பட்ட ஆன்மீக வைரத்தை விட்டு விட்டு கரியின் பின் ஆசீர்வாதம் தேடி அலைகிறோம் ?  
நம்முள் இருக்கும் இந்த ரகசியத்தை அறிய தவறவிட்டு எங்கெங்கோ தேடி அலைகிறோம். 
கோவில்கள், புனித   தலங்களுக்கு உண்மையான தேடுதலோடு நாம் சென்று வந்தால் நிச்சயம் ஞானத்தை தரவல்ல ஒரு உண்மையான குரு வாய்க்கும். நாம் ஒருபோதும் குருவை தேட முடியாது. நம் தேடுதல் உண்மையானால் நிச்சயம் நம்மை குரு ஆட்கொள்வார்.   தானம், தவம் இரண்டு மட்டுமே இந்த உயர்ந்த வாழ்க்கைக்கும் நம்மை எடுத்து செல்லும். வாழும்போது தானம், தவம் செய்வோரை மட்டுமே அண்டி வாழ வேண்டும். ஒழுக்கமொடு வாழ்தல் அதனினும் நன்று. 
இதை தான் வள்ளுவர் "ஒழுக்கம் விழுப்பம்  தரலாம் ஒழுக்கம்
                                                     உயிரினும் ஓமப் படும்"  - என்கிறார் 

No comments:

Post a Comment

Total Pageviews

Followers