Saturday, March 24, 2012

தமிழ் சாதிகள்




குமரி கண்ட தமிழர்கள் குமரி கண்டத்தை 12 பிரிவுகளாக (12  நாடுகளாக ) பிரித்து நல்லாட்சி புரிந்து, கல்வி, கேள்வி, ஞானம் பெற்று இளமையுடன் வாழ்ந்து வந்தனர். ஆதலால் தான் குமரி கண்டத்தை  "இளமை முறியா கண்டம்" என்று கூறினர். இன்று  மருவி "லெமூரியா" என்று அழைகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நன்னூல் என்னும் பழந்தமிழ் நூல். இந்த பன்னிரண்டு நாட்டை பற்றி கூறுகிறது.

"தென்பாண்டி குட்டம் குடங்கற்கா வேண்பூழி 
பன்றி யருவா வதன்வடக்கு  - நன்றாய
சீத மலாடு  புனனாடு  செந்தமிழ்சே 
ரேதமில் பன்னிரு நாட்டெண்"

குட்ட நாடு, குடகுநாடு, கற்க நாடு வேண்நாடு ,பூழிநாடு, பன்றிநாடு, அருவா நாடு, அருவ வடக்கு நாடு, நன்னாடு, சீதலநாடு, மலாடு நாடு, புனல்நாடு  என்னும் 12 நாடுகளும் "தமிழ் நாடு" என்று அழைக்கப்பட்டது. இங்கு வாழ்ந்த மக்கள் மனித பருவங்கள் 12 ஆக பிரித்து  அவற்றை கோள்சாரம் என்றனர். கோள் - என்றால் ஒளி - (உயிர்) சாரம் - மாற்றம். உயிர் மாற்றம்  (பருவம்).
மேற்படி கோள்சாரத்திற்க்கேற்ப (பருவ மாற்றம்). தங்களை கோள்திரத்தார் என்றனர்.கோள்திரத்தார்  என்னும் சொல் மருவி கோத்திரம் என்றாகி விட்டது.

அதன் படி

சூரிய கோள் படி  - சோழர் - சோழம் என்றால்  சோ - உயிர் - அழம்  என்றால் கொண்டவர்.
சிவா வழிபாடு செய்தவர்கள் இவர்கள் இன்று "செம்பியர்" ஆவார்கள்.

இரண்டாவது கோச்சாரபடி "சந்திரன்" அம்சம் கொண்டவர்கள் பாண்டியர்.

பாண்டு - என்பது - உடல் - ஆகும் .
உடலை ஓம்பி வளர்த்தவர்கள் என்பதாம்.இவர்களே இன்று "பண்டாரம்" என்று அழைக்கப்படுகின்றனர்.

மூன்றாவது கோச்சாரப்படி: சேரர்கள் (ஆண்,பெண்,சேர்மானம்)

இவர்கள் "சேரமான்" ஆவார்கள் .சேரர் - என்றால் சேர்கையானவர்கள் என்பது. இவர்கள் இன்று "சேர்வை" என்றழைக்கப்படுகிரர்கள்.

நாலாவது  கோச்சாரபடி: தொண்டைமான்கள் 
தொண்டை  - யானை முகம் , மான் - என்றால் பிறப்பு - இவர்கள் மழவர் என்றனர்
மழவர் என்றால்  - குழந்தை (மழழை    - குழந்தை ). இவர்கள் பிள்ளைமார்கள் ஆவார்கள்.

ஐந்தாவது கோச்சாரபடி: அதிகமான்கள் ஆவார்கள்

அதிகம் என்றால்  மிகுதி என்று பொருள். மான் என்றால் பிறப்பு  என்று பொருள்.
அதிக வலிமை உடையவர்கள் . அதாவது யாளியின் பலம் உடையவர்கள்.
இன்று இவர்கள்  கெங்கர் (கௌண்டர்)  என்றழைக்கபடுகின்றனர்.     

ஆறாவது  கோச்சாரபடி: மலையமான்கள்  ஆவார்கள்

 மலைகளில் வாழ்ந்து தமிழ் மொழியை கற்று உயிர், மெய், உயிர்மெய், ஆயுத எழுத்துகள் என்ற மறைகளை வன்னிப்பவர் (பாடுவர்) எனப்படும். இவர்கள் வன்னியர்கள் என்றழைக்கபடுகின்றனர்.

ஏழாவது  கோச்சாரபடி:  ஓய்மான்கள்  - வயோதிகர்கள்.

  ஐம்பொறிகளும், உடலும் ஓய்ந்து  போய்  உள்ளவர்கள்  ஓய்மான்கள்  ஆவர். இவர்கள் இன்று மூப்பனார்  என்றழைகின்றனர்.மூப்பு - முதுமை ஆகும் . மூப்படைந்து ஓயிந்து இருப்பவர்கள்.

 எட்டாவது கோச்சாரபடி: வேண்மான்களாவர் 

வேள் + மான் = வேண்மான்.
வேள்வி புரிபவர்கள் சமய சடங்கு, விவசாயம்  செய்பவர்கள். இவர்கள் இன்று வேளிர், வேளாளர், வேளான் எனப்படுகின்றனர்.

ஒன்பதாவது கோச்சாரபடி: சந்திமான்கள் 

சந்தி - நேருக்கு நேர்  பகைவர்களை சந்திப்பவர்கள் .
நோய் என்னும் பகையை நேரில் சந்திப்பவர்கள். இவர்கள் குறும்பர் என்று அழைப்பர்.
குறும்பு - குற்றம் ( பூத குற்றத்தால் நோய் வருவது. அதை சந்திப்பவர்கள் ).

பத்தாவது  கோச்சாரபடி: அந்திமான்கள்

அந்தி என்பது மறைவு என்பதாம். உடலை விட்டு உயிர் மறைதல். இவர்கள் "கங்கர்" எனப்பட்டனர். கங்கர் என்றால் - மரணம் என்று பொருளாகும்.

பதினொன்றாவது கோச்சாரபடி: வெளிமான்கள்

இறந்தவர்களை வீட்டிற்கு  வெளியே கொண்டு சென்று சுடு காட்டில் எரிப்பதாம்.
இவர்களை காடவர் என்பர். இவர்கள் "பல்லவர்" என்றும் அழைப்பர்.
பல்லவம் =( பல+அவயம்) . அதாவது உடல் பல அவயமாக பிரிவது என்பதாம். இவர்கள் பள்ளர் என்றழைக்கபடுகின்றனர்.

பன்னிரெண்டாவது  கோச்சாரபடி: அலைமான்கள் (உடலற்ற ஆன்மா)

உடலற்ற ஆன்மா, மேலும் கீழும், முன்னும், பின்னும், அலைதல். இவர்கள் திரையர்  எனபடுவர். திரை -கடல்- அலைபாயும் கடல் . இவர்கள் திரையர், அரையர், மீனவர்கள் ஆவார்கள்.

இவ்வாறு இருந்த தமிழ் கோச்சாரம், செய்யும் தொழிலால் மேலும் விரிந்து பல சாதிகளாக உரு பெற்று பல இன்னல்களுக்கு தமிழர்கள் ஆளாகி வருகின்றனர். 

சாதியர் என்றால் - சாதிப்பவர்  என்று பொருள். தன் உயிருக்கு பல பருவங்கள் வருகின்றது என்பதை உணர்ந்து, அவற்றை மாற்றி (சாதித்து) அமைத்து சாகா வரம் பெற பாடுபட்ட தமிழ் சமுதாயம். இன்று அதற்கே "பலி" ஆகி வருவது பெரும் வருத்தத்தை  அளிகின்றது.

இந்த 12 பருவங்கள் எல்லா மனிதருக்கும் உண்டு என்பதை உணர்ந்து,  அதை மாற்றி அமைத்து " சாகாவரம்" பெற வேண்டும்.


இதை உணர்ந்த பாரதி

"சாதிகள் இல்லையடி பாப்பா
குலத்  தாழ்ச்சி சொல்லல் பாவம்"
                                                                    என்றார்.

இதை நெருஞ்சில் சித்தரும்

"தமிழர்கள் மறக்க வேண்டியது சாதியை
  தமிழர்கள் மறுக்க வேண்டியது சாவை"
                                                                  என்கிறார்.

" சாதி பேதம் தனைக்குறித்துத்
தயங்கி மயங்கித் தளராதே " 
                                                         சிவஞானபோதம்.


"ஞானம் பதியா இழிகுலத்தோர்
       நாட்டிற் பிரித்தே  சதி தன்னை 
ஈனச் சாதி யாரென்றே 
இகழ்ந்தார் முத்தர் பத்தரையும் "
                                                                     அகத்தியர்


"சாதி குலம் பிறப்பறுத்துச் சகமறிய  எனையாண்ட  "

                                                                                                        மணிவாசகர்.


" கோத்திர முங்கு லமும்கொண்   
என் செய்வீர்   "
                                                                           அப்பரடிகள் .


No comments:

Post a Comment

Total Pageviews

Followers