Wednesday, March 28, 2012

நோய் தீர இருபது வழிகள்



  1. மனதிற்கு பிடித்த வைத்தியரிடம் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்.
  1. தனக்கு பிடித்த பிடிக்காதவைகளை வைத்தியரிடம் தயக்கமின்றி கூற வேண்டும்.
  1. வைத்தியர் கூறும் அறிவுரைகள்உணவு முறைகள்பழக்க முறைகள்சூழல் மாறுபாடுகள் இவற்றை முறையாக புரிந்து கொண்டு அதன் படி நடந்து வர வேண்டும்.
  1. சந்தேகங்கள் ,மறதி ,கவனக்குறைவு ஏற்பட்டால் அதை முறையாக கேட்டு புரிந்து கொள்ளவும்.
  1. வைத்தியர் கூறும் காலம் வரை பொறுமையாகவும்முறையாகவும் மருந்துகளை பயன்படுத்தவும்.
  1. வைத்தியர் கூறும் கால வரையறைக்குள் நோயை குணம் செய்து கொள்ள வேண்டி பத்தியபழக்க,  வழக்க முறைகளை கடுமையாக பின்பற்றவும்.
  1. காலங்கள் மாறினால் நீங்களும்வைத்தியரும் சில சூழ்நிலை மாறுபாட்டால் கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாகிவிடும்இதற்கு இடம் கொடுக்காதீர்கள்.
  1. நீங்கள் நல்லவர்கள் என்றாலும் ஊழ் வினை மெல்ல வந்து வைத்தியருக்கும்உங்களுக்கும் உள்ள  மனநிலையை மாற்றி அமைத்து விடும்எனவே கவனமாக இருக்கவும்.
  1. வைத்தியரிடம் பேசும் போது தன்மையான வார்த்தைகளை மட்டும் பயன் படுத்தவும்.
  1. வைத்தியர் உங்களை புரிந்து கொள்வதற்க்கும்நோயை புரிந்து கொள்வதற்கும் கால அவகாசம் கொடுங்கள்.
  1. கூடா நட்புபழக்கம் இருக்கும் என்றால் வைத்தியரை தனிமையில் கண்டு விளக்கம் கூறவும்.
  1. பேய் ,பில்லிசூனியம்குறி கேட்டல் ,சாமி ஆடுதல்,
    குங்குமம் விபூதி தீர்த்தம் பெறுதல்வாக்கு கேட்டல்ரட்சை கட்டுதல் ,
    பரிகாரம் கேட்டல் இவற்றில் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் அங்கு செல்ல இருக்கும் 3நாட்களுக்கு முன் மருந்து சாப்பிடுவதை நிறுத்தி விடவும்.
  1. வேறு மருந்து (மருத்துவ முறைக்கு உங்கள் மனம் விரும்பினால் தயக்கமின்றி வைத்தியரிடம் பணிவுடன் கூறி செல்லவும்.
  1. வைத்தியரை எக்காரணம் கொண்டும் பகைமையாக கருதாதீர்கள். (குறை கூறாதீர்கள்)தெய்வத்தை இகழ்ந்ததற்கு சமம்.
  1. உறவினர்கள் அண்டைஅயலார்தலைவர்கள் கூறும் மாற்று மருத்துவ கருத்துகளில்  உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுமாயின் வைத்தியரிடம் முறையாகக் கூறி விடை பெறலாம்.
  1. எப்பொழுதும் உங்களுக்கும் வைத்தியருக்கும் நல்லுறவு நீடிக்கும் படி நடந்து கொள்ளவும்
  1. பாவத்தால் தான் நோய் வருகிறது என்று உணர்ந்து பாவ காரியங்களான பிற உயிர்களை அடித்தல்கொல்வது ,பிறரை சபிப்பதுதீய செயல்களை செய்வது இவற்றை விடவும்.
  1. கர்ம வினைகளால் நோய்  எற்படுகின்றது என்பதை  உணர்ந்து, மருந்து சாப்பிடும் நாள் வரைக்கும்  அன்னதானம்முதியோர்களுக்கு உதவுதல்அனாதை குழந்தைகளுக்கு உணவு ,உடை தருதல்பொது சேவைகள் இவற்றை செய்து வரவும்.
  1. நோய் நீங்க வேண்டும் என்று பெரியோர்கள்சித்தர்கள்குல தெய்வங்கள் ,முதியோர்கள் இவர்களை மனதாலும்உடலாலும் வேண்டி வணங்கி வாருங்கள்.
  1. உங்கள் நோய்க்கு பிறர் காரணம் இல்லை என்பதை உணர்ந்து "தன் வினை தீர வழிஎன்ன
    என்பதை சிந்தித்து அதன் படி நடந்து வரவும்.

ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்"
"விடாது வினை"
"தன் வினை தன்னைச் சுடும்"
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"

தன் வினை தீர தானமும்தவமும் வேண்டும்.

என்ற பெரியோர்கள் அறிவுரைகளை மனதில் கொள்ளவும்.

No comments:

Post a Comment

Total Pageviews

Followers