Saturday, March 24, 2012

புண்ணியம் தரும் புனித மொழிகள்



அருட்பெரும்  ஜோதி 
தனிப்பெரும் கருணை 
வள்ளல் பெருமானின் 178 அவதார நாளான இன்று, அவரது கருணையை   வேண்டி வணங்கி நாமும் மரணமில்லா பெரு வாழ்வடைய பின்வரும் புண்ணிய மொழிகளை கடைபிடிப்போமாக.   
தவத்திரு இராமலிங்க அடிகளாரின் புண்ணியம்  தரும் புனித மொழியின் வழி நின்று வாழ்க்கை  பயணத்தை நல் வழியில்  எடுத்துச் செல்வோமாக.

  1. நல்லதோர் மனதை நடுங்கச் செய்தேனோ!
  2. வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
  3. தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
  4. கலந்த  சிநேகிதரைத் கலகஞ் செய்தேனோ!
  5. மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!    
  6. குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ! 
  7. ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
  8. தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ! 
  9. மண்ணோரம் பேசி வாழ்வழித் தேனோ! 
  10. உயிர்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ! 
  11. களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
  12. பொருளை இச்சித்துப்  பொய்சொன் னேனோ!
  13. ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ!
  14. வரவுபோக் கொழிய வழியடைத் தேனோ! 
  15. வேலை யிட்டுக் கூலி குறைத்தேனோ! 
  16. பசித்தோர் முகத்தைப் பாரதிருந் தேனோ!
  17. இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ!
  18. கோள் சொல்லிக் குடும்பங்  கலைத்தேனோ!
  19. நட்டாற்றில் கையை நழுவ  விட்டேனோ! 
  20. கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!
  21. கற்பழிந் தவளைக் கலந்திருந் தேனோ!
  22. காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
  23. கணவன் வழி நிற்போரைக் கற்பழித் தேனோ! 
  24. கருப்ப மழித்துக் களித்திருந் தேனோ!
  25. குருவை வணங்கக் கூசிநின் றேனோ! 
  26. குருவின் காணிக்கை கொடுக்கக் மறந்தேனோ!
  27. கற்றவர் தம்மைக் கடுகடுத் தேனோ!
  28. பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ! 
  29. பட்சியை கூண்டில்  பதைக்க அடைத்தேனோ! 
  30. கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ! 
  31. ஊன் சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
  32. கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ! 
  33. அன்புடைய  வர்க்குத்  துன்பஞ் செய்தேனோ! 
  34. குடிக்கின்ற நீருள்ள குளந்தூர்த் தேனோ! 
  35. வெய்யிலுக் கொதுங்கும் விருட்ச மழித்தேனோ! 
  36. பகை கொண்டு அயலோர் பயிரழித்   தேனோ!
  37. பொதுமண்டபத்தைப் போயிடித் தேனோ !
  38. ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
  39. சிவனடி யாரைச்  சீறி வைதேனோ!
  40. தவஞ்செய் வோரைத் தாழ்வு சொன்னேனோ!
  41. சுத்த ஞானிகளைத் தூசணஞ்  செய்தேனோ!
  42. தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
  43. தெய்வ மிகழ்ந்து  செருக்கடைந் தேனோ!    

வள்ளலார்  வழி நின்று புண்ணியம் பெறுவோமாக  

சிறு தெய்வங்கள் எல்லாம் மரண தருவாயில் கைவிடும். தனிப்பெரும் சோதியாகிய கருணை மரண வலி தீர்த்து முக்தி நலம் தரும். ஆகவே ஜோதியை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் மரணம் அற்று போகும்.  - வள்ளல் பெருமான்

No comments:

Post a Comment

Total Pageviews

Followers